Gutters Stories #1 - Lake

Gutters Stories #1


லேக் 

வழக்கம் போல அவன் அன்னைக்கும் கிளாசுக்கு போகாம பங்க் பண்ணிட்டான்... ஜூனியர்ஸ் அ எப்பவும் மீட் பண்ற அந்த இடத்துக்கு போலாம்னு கிளம்பி போய்ட்டு இருந்தான்... போற வழியில கட்டர்ஸ் ல அவன் ஜூனியர்ஸ் உட்கார்ந்து இருந்தாங்க... அவனுக்கு ஜூனியர்ஸ் னா ரொம்ப பிடிக்கும்... அவங்க ஜூனியர்ஸ் க்கு அவன் கிட்ட கதை கேட்கிறது நான் ரொம்ப பிடிக்கும் ... எப்பவும் போல பல கதைகள் அவங்க பேசுனாங்க... அப்போ தான் அவங்க சொன்னாங்க... அண்ணா ! நாளைக்கு எங்க மேம்... எங்கள லேக் க்கு கூட்டிட்டு போறேன் னு சொன்னாங்க... ஈ வி எஸ் க்ளாஸ் அப்போ னு சொன்னாங்க... எப்பவுமே கதை கேக்குறதுல ரொம்ப ஆர்வமான கற்பகம் கேட்டா... ஏன் ?அண்ணா ! அங்க யாரையும் பர்மிசன் இல்லாம போக விட மாட்டுறாங்க னு... அப்போ தான் அவன் அங்க ஏன் பசங்க போக அனுமதி இல்லை னு காரணத்தையும்... அதுக்கு பின்னாடி இருக்க கதையும் சொன்னான். 

இருபது வருஷத்துக்கு முன்னாடி... அந்த காட்டோட மறுபக்கத்துல இருக்க மோட்டார் ரூம் க்கு... காலேஜ் டேங்க் ல தண்ணி ஏத்தறத்துக்காக மோட்டர் போட போனார் அந்த அண்ணா. அப்போ போற வழியில தான்... அந்த லேக் பக்கமா இருந்து துர்நாற்றம் அடிக்க... என்ன அப்படி னு போய் பார்த்தா... அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம்... அப்புறம் அவர் காலேஜ் ல இதை சொல்ல... அப்புறம் போலீஸ் வந்து அந்த டேட் பாடியை கொண்டு போய்ட்டாங்களாம். யார் அந்த பெண்?  அவளுக்கு எப்படி இது நடந்துச்சி?

அது ஒரு மே மாசம் ...காலேஜ்ல அட்மிஷன்ஸ் வழக்கம் போல நடந்துட்டு இருந்துச்சு... அவளும் நம்மள மாதிரி தான்... அங்க படிக்கணும்னு ஆசைப்பட்டு அப்பிளிகேஷன் ஃபார்ம் வாங்க வந்தா ...அப்ளிகேஷன் வாங்கிட்டு வீட்டுக்கு போகும்போது...வீட்டுக்குப் போக ஷார்ட் கட் னு ஒரு வழியை சொல்ல...அதுல போன அவ வழி தவறி காட்டுக்குள்ள போய் மாட்டிக்கிட்டா. அவ போன இடம் காலேஜ் பக்கத்துல இருக்க லேக் சைடு... அந்த நேரம் அந்த பக்கமா ஒரு கும்பல்... பக்கத்துல இருக்க ஏர்ஃபோர்ஸ் ல வேலையை முடிச்சிட்டு... சரக்கடிக்க இந்த காட்டு பக்கம் வந்திருக்காங்க. வந்தவங்க செம போதையில் இருக்க... அவங்ககிட்ட அந்த வழியா வழி தவறி போன அந்த பொண்ணு மாட்டிக்கிட்டா... செம போதையில் இருந்த அவங்க... அந்த பொண்ண பலாத்காரம் பண்ணி கொண்ணுட்டாங்க... அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி இந்த கொலை நடந்தது வெளிய தெரிஞ்சி... போலீஸ் வந்து அந்த கொலை பண்ணது யார் னு விசாரிக்கும் போது... அங்க இருந்த பொருட்கள வெச்சி... அங்க குடிக்க வந்த யாரோ இதை பண்ணிருக்காங்க னு முடிவுக்கு வந்து... விசாரிக்கும் போது அந்த பொண்ணு காணாம போய்ட்டா னு கம்ப்ளைண்ட் வந்த நெக்ஸ்ட் டே ல இருந்து... ஏர்ஃபோர்ஸ் ல லவேலை க்கு வந்த சில ஆளுங்க தொடர்ந்து  லீவ் எடுத்துட்டு வேலைக்கு வரமா இருந்தது தெரிஞ்சி... அவங்கள தேடும் போது... அவங்க தான் அந்த கொலையை பண்ணங்க னு கண்டுபிடிச்சாங்க... இந்த சம்பவத்துக்கு அப்புறம் அந்த பக்கம் யாரையும் போக பர்மிசன் இல்ல... வாட்ச்மேன் வேற அங்க காவல் க்கு போட்டுட்டாங்க... ஆனா அந்த லேக் க்கு காலேஜ் ல இருக்க ஹால் பசங்க போய்ட்டு வந்துட்டு தான் இருங்காங்க திருட்டுதனமா இன்னும்... நான் ரெசிடண்ட் பசங்க தான் அங்க போறது கொஞ்சம் கஷ்டம்... ஆனா காலேஜ் ல நடக்குற சில ஃபங்க்ஷனுக்கு இங்க இருந்து தான் களிமண் கொண்டு போவாங்க... ஃபைன் ஆர்ட்ஸ் வோர்க் பண்றதுக்கு. சில ஹால் பசங்க... மழைக்காலத்துல நிரம்பி வழியுற லேக் ல... நீச்சல் அடிச்சு குளிக்கவும் செய்வாங்க...வெயில் காலத்துல தண்ணி இல்லாம அந்த லேக் க பார்த்தா... என்னது இது லேக் க ? னு கேள்வி கேட்டுகுற மாறி ஒரு லுக் ல காட்சித் தரும். ஆனா எனக்கு ஹால் ல இருக்க பசங்க கூட இந்த இடத்துக்கு போன மெமரிஸ் ல தனி ரகம் அதுவும் அர்த்த ராத்திரில பல டைம். நீங்களும் நல்ல சுற்றி பார்த்துட்டு வாங்க அந்த பக்கம் போய் னு சொல்லி கதை யை முடிச்சான்.

ஓ இது தான் கதையா அங்க ஏன் போக விட மாட்டுறாங்க னு அந்த லேக் பத்தின கதையை கேட்டுட்டு க்ளாஸ் க்கு டைம் ஆயிடுச்சி  அண்ணா நான் கிளம்புறேன் அவ ஃப்ரெண்டு சினேகா வ கூட்டிட்டு க்ளாஸ் க்கு கிளம்பிட்டா கற்பகம். 

- மீண்டும் கட்டர்ஸ் ல மீட் பண்ணுவோம்.

( பின் குறிப்பு: இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட கற்பனை கதை.  )

- தினேஷ் "SDK" குமார்

Comments

  1. Solvathellam karpanai nu pota thaan elarum thirutu thanama nama poi irukom apadi thappa nenaikka matangala athuvum night poi irukom potu irukengale anna 😂

    ReplyDelete
  2. Super ah iruku bro❤️

    ReplyDelete
  3. Intha kadhai unmaiya poiyaa😂

    ReplyDelete
  4. Apdina idhellam karpanaiya?!
    Anyway nice to read...

    ReplyDelete

Post a Comment