Gutters Stories #2 - Shooting Wall
சேச்சி கடையில நபாட்டி வாங்க போனான் அவன்... அப்போ க்ளாஸ் க்கு போய்ட்டு... ஜெராக்ஸ் எடுக்க சேச்சி கடைக்கு கற்பகம் அவ ப்ரெண்ட் பூர்வஜா கூட வந்தா... அப்போ உடனே அவன பார்த்ததும் பூர்வஜா கேட்டா... எனக்கு என் ப்ரோ அந்த லேக் கதையை சொல்லல னு கேட்டா... அதுக்கு அவன் "நீ தான அந்த மேம் மீட்டிங் க்கு கூப்டாங்க னு போய்ட்ட ! நான் என்ன பண்றது னு" சமாளிச்சிட்டான் அவன். சரி ! வாங்க போய் கேண்டின் ல சாப்டுட்டு, பேசலாம் னு அவங்கள கூட்டிட்டு கேண்டின் க்கு போனான். அப்போ அங்க சதீஷ், கோதை, பத்மா, சோலா னு ஒரு பெரும் கூட்டம் படிச்சிட்டு இருந்தாங்க சிஏ எக்ஸாம்க்கு. அவங்க கூட போய் உட்கார்ந்து... அந்த கேண்டின் ஸ்பெஷல் மாவு ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டுட்டு இருக்கும் போது...சதீஷ் கேட்டான்... "இந்த காட்டுல வேற எதாவது இடத்துக்கு... நிறைய பேர் போகமா நீங்க போய் இருக்கீங்களா? அப்படி ஏதாவது இடம் யாருமே போகவே... ரொம்ப கஷ்டமான ப்ளேஸ் இருந்தா... அதை பத்தி சொல்லுங்க" னு கேட்டான் அவன்கிட்ட... அப்போ தான் அவன் அந்த இடத்தை பத்தி அவங்களுக்கு சொன்னான். ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி அந்த அடர்ந்த காட்டுக்குள்ள ...