Gutters Stories #2 - Shooting Wall

சேச்சி கடையில நபாட்டி வாங்க போனான் அவன்... அப்போ க்ளாஸ் க்கு போய்ட்டு... ஜெராக்ஸ் எடுக்க சேச்சி கடைக்கு கற்பகம் அவ ப்ரெண்ட் பூர்வஜா கூட வந்தா... அப்போ உடனே அவன பார்த்ததும் பூர்வஜா கேட்டா... எனக்கு என் ப்ரோ அந்த லேக் கதையை சொல்லல னு கேட்டா... அதுக்கு அவன் "நீ தான அந்த மேம் மீட்டிங் க்கு கூப்டாங்க னு போய்ட்ட ! நான் என்ன பண்றது னு" சமாளிச்சிட்டான் அவன். சரி ! வாங்க போய் கேண்டின் ல சாப்டுட்டு, பேசலாம் னு அவங்கள கூட்டிட்டு கேண்டின் க்கு போனான். அப்போ அங்க சதீஷ், கோதை, பத்மா, சோலா னு ஒரு பெரும் கூட்டம் படிச்சிட்டு இருந்தாங்க சிஏ எக்ஸாம்க்கு. அவங்க கூட போய் உட்கார்ந்து... அந்த கேண்டின் ஸ்பெஷல் மாவு ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டுட்டு இருக்கும் போது...சதீஷ் கேட்டான்... "இந்த காட்டுல வேற எதாவது இடத்துக்கு... நிறைய பேர் போகமா நீங்க போய் இருக்கீங்களா? அப்படி ஏதாவது இடம் யாருமே போகவே... ரொம்ப கஷ்டமான ப்ளேஸ் இருந்தா... அதை பத்தி சொல்லுங்க" னு கேட்டான் அவன்கிட்ட... அப்போ தான் அவன் அந்த இடத்தை பத்தி அவங்களுக்கு சொன்னான்.

ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி அந்த அடர்ந்த காட்டுக்குள்ள தினமும் துப்பாக்கி சவுண்ட் கேக்கும். டெய்லி அங்க தீவிரமா பயிற்சி எடுத்துட்டு இருப்பாங்க. அப்படி பலருக்கு தீவிரமா பயிற்சி பண்ண பயன்பட்ட அந்த இடத்துல இப்போ புல் செடி முள் ல வளர்ந்து ஒரு பயன்பாடற்ற நிலையில இப்போ கிடக்குது. ஆனா இன்னைக்கும் சில ஹால் பசங்க அங்க திரில்லிங்க போய்ட்டு வந்துட்டு தான் இருங்காங்க. அந்த இடம் ஏன் அப்படி யூஸ்லெஸ் ஆச்சி? அந்த இடம் பேரு என்ன? அப்படி னு அந்த கதை கேட்கும் பசங்க கிட்ட அந்த இடத்தை பத்தி ஒரு ஆர்வத்தை தூண்டுனான் அவன். 

ஸூட்டிங் வால் - இட்ஸ் அ ஸ்டோரி அபௌட் எ வால் .

பதினைந்து அடிக்கும் மேற்பட்ட உயரம் முப்பது அடிக்கும் மேற்பட்ட அகலமான பெரிய மதில் சுவர் காட்டுக்குள்ள இருந்துச்சாம். இப்போவும் இருக்கு. அதுக்கு ஐம்பது தூரத்துல இன்னொரு ரெண்டு அடிக்கு சின்ன சுவர். மொத்தமும் செங்கற்கள் ல கட்டப்பட்ட ஸ்ட்ரக்சர் அது. அப்போலாம் அங்க துப்பாக்கி சூட்டிங் ப்ரெக்ட்டிஸ் பண்ணாங்களாம். இன்னைக்கும் அங்க போனவங்க அவன்கிட்ட சொன்னது லாம் அங்க துப்பாக்கி குண்டுகள் சுவரை துளைச்ச அடையாளம் இன்னும் அங்க இருக்கும் னு அவன் கேட்ட விஷயங்களை சொன்னான் அவன்.

"அங்க ஏன் ப்ரோ இப்போ ப்ரெக்டிஸ் பண்றது இல்ல ?" னு கேட்டாள் சோலா.

தெரியல என்ன காரணம் னு... கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அந்த காட்டுல... அங்க வேலை பாக்குற ப்ரொபசர்ஸ் க்கு வீடுகள் கட்டும் போது... அந்த வால் பக்கத்துலயும் வீடுகள் இடைவெளி விட்டு கட்டுனாங்களாம். அப்புறம் அந்த வீட்டுல குடி இருக்கவங்க பாதுகாப்புக்காக... அங்க ப்ரெக்டிஸ் பண்றத ஸ்டாப் பண்ணிட்டாங்க னு ஒரு புக் ல இருந்த கதையை ரெப்ஃரெண்ஸ் வெச்சி... ஒரு வேளை அதனால இருக்கலாம் னு சொன்னான் அவன்.

நீங்க அங்க போய் இருங்கீங்களா னு கேட்டாள் பூர்வஜா.

இல்ல. என் ப்ரெண்ட்ஸ் போயிருக்காங்க னு சொன்னான். 

தொடர்ந்து 

ஒரு டிசம்பர் மாசம் காலேஜ் இருக்க கேம்பஸ் ல காலேஜ் ப்ரெண்ட்ஸ் ல  வாக் போகும் போது அந்த இடத்துக்கு போனாங்களாம். போகுற வழியில காட்டுக்குள்ள இருக்க ஒரு ப்ரெபசர் வீட்ட தாண்டி தான் அங்க போக முடியும். அவங்க போன அன்னைக்கு அந்த ப்ரெபசர் வீட்ல யாரும் இல்ல. அவங்க அந்த ப்ளேஸ்க்கு போய் அதை எல்லாம் பார்த்துட்டு ரிடர்ன் வரும் போது அந்த ப்ரெபசர் வீட்டுக்கு வெளியே வந்துட்டார். சோ ! அவங்க ரிட்டர்ன் எப்படி போகுறது னு தெரியாம...காட்டுக்குள்ள வழி தெரியாம சூரியன் மறையுற திசையில பயணிச்சி... அந்த காட்டுல இருக்க லேக் பக்கம் போய்ட்டோங்களாம். அங்க இருந்து ஈசியா மறுபடியும் அவங்க ஹால் க்கு வந்துட்டாங்க ஈவ்னிங் மெஸ்ல டீ குடிக்க. இப்படி அவங்க அங்க போய்ட்டு வந்த பெரிய அட்வெஞ்சர் கதையை அந்த மெஸ்லயே டீ குடிச்சிட்டு இருந்த என்கிட்ட ஷாட்டா சொல்லி முடிச்சாங்க. அதை உங்கிட்ட சொல்றேன்.

"உங்களுக்கு எப்படி அந்த இடத்த பத்தி தெரியும்" னு கேட்டாள் பத்மா.

காலேஜ் ல ஒரு ப்ரோமோ ல அந்த ப்ளேஸ் அ காட்டுனாங்க.  அப்போ தான் அது எந்த இடம் னு சீனியர்ஸ் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். அதே மாறி எனக்கு தெரிஞ்ச ஒரு ஹால் பையன் அவன் ப்ரெண்ட்ஸ் கூட அந்த உயர்ந்த சுவர் மேலே உட்கார்ந்துட்டு ஒரு போட்டோ இன்ஸ்ட்டால போஸ்ட் பண்ணி இருந்தான் அப்படி தான் தெரியும் னு சொன்னான் அவன்.

முடிஞ்சா அங்க கூட்டிட்டு போங்க டூட் எங்கள னு கேட்டாங்க அந்த ஜூனியர்ஸ். அது ரெஸ்ட்ரிக்டட் ப்ளேஸ். அங்க யாரையும் போக விட மாட்டாங்க , போறது ரிஸ்க் னு சொல்லிட்டு ஹால் ல போய் மொபைல் சார்ஜ் போட போகணும் கிளம்பி போய்ட்டான் அவன் ஜூனியர்ஸ் க்கு டாடா சொல்லிட்டு.

- அடுத்த ஸ்டோரில கட்டர்ஸ் ல மீட் பண்ணுவோம்.

( பின் குறிப்பு: இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட கற்பனை கதை.  )

- தினேஷ் "SDK" குமார்

Comments

Post a Comment