Gutters Stories #3 - Five Stones
அது ஒரு பிப்ரவரி மாசம்.
காலேஜ் புட்பால் கிரவுண்ட் ல கதை பேசிட்டு இருக்க ஜூனியர்ஸ் அ பார்க்க போனான். போனதும் வழக்கம்போல... கொஞ்ச நேரம் க்ளாஸ் கதைல கேட்டுட்டு...அப்போ அந்த கேங்ல இருந்த கைலாஷ் கேட்டான்... "அண்ணா! உங்களோட ஃபர்ஸ்ட் இயர்ல, நீங்க என்ன ல ஃபன் பண்ணிருக்கீங்க னு" கேட்டான். அதுக்கு அவன், பழைய கேண்டின் பின்னாடி தான் எப்பவுமே ப்ரெண்ட்ஸ் கூட இருப்போம். அப்போ அங்க ரொம்ப மறைவா நிழலா இருக்கும். சோ ! ப்ரெண்ட்ஸ் கூட அங்க விளையாடிட்டு ஒரே என்ஜாய் தான் எப்பவுமே. சம் டைம்ஸ் சீனியர்ஸ் ம் ஜாயின் பண்ணிப்பாங்க. அப்போ அங்க ஒரு மறைவா ஒரு ப்ளேஸ் இருக்கும். அது காலேஜ் ல இருக்க கொஞ்ச பேருக்கு மஜா பண்ணி அட்டி போடுற ப்ளேஸ். அப்போ சிவா கேட்டான், எந்த ப்ளேஸ் அண்ணா ? னு , உடனே ஹரீஷ் , அது எங்க இருக்கு னு ? னு அடுத்த கேள்வி கேட்டான். சரி வாங்க னு .. அவங்கள கூட்டிட்டு போனான். அங்க போனா... வெறும் ஏதோ மூணு பெரிய பாறங்கல் மட்டும்... வேற வேற ப்ளேஸ் ல இருந்துச்சி. இந்த ப்ளேஸ் பத்தி சொல்லுங்க னு அண்ணா கொஞ்சம் டீடேயிலா னு வழக்கம் போல கேட்டாங்க அந்த பசங்க.
" நம்ம காலேஜ் னு னா ரொம்ப பேமஸ்...
புள்ளிங்கள கலாச்சனா குடுப்போம் சோமஸ்...
....
....
....
ரன்னிங் ரேஸ் னா பீ.டி. உஷா மா...
ஃபைவ் ஸ்டோன் அட்டியில மஜா கிஸா மா..."
- கானா சுதாகர் பாடின ஒரு டீப்வுட்ஸ் ப்ரோமா ஸாங் நடுவுல இப்படி ஒரு லைன் வரும். அப்படி அந்த ஸாங் ல அந்த காலேஜ் ல இருக்க முக்கியமான ஸ்பாட்ஸ் பற்றி மென்சன் பண்ணிருப்பாங்க. அந்த ஸாங் ல வர ஃபைவ் ஸ்டோன்ஸ் (Five Stones) பத்தி நீங்க கேள்விப்பட்டு இருங்கீங்களா ? அது எங்க இருக்குனு தெரியுமா ? அது இப்போ அங்க இருக்கா? அப்படி அது இப்போ அங்க இல்லனா அதுக்கு என்ன ஆச்சு? வழக்கம் போல பல கேள்விகளோட அதுக்கான பதில் தேடி கதைக்கு உள்ள போலாம்.
பைவ் ஸ்டோன்ஸ் (Five Stones) அஸ் பிலாஸ்சபர் ஸ்டோன் (Philosopher Stone).
எப்படி அண்ணா இந்த நேம் வந்துச்சினு ? ஏதோ நான் தான் அதுக்கு நேம் வெச்ச மாறி ஏன்கிட்ட குறுக்கு கேள்வி கேட்டா சந்தியா.
அந்த இடத்துல அஞ்சு பெரிய பாறாங்கல் சுற்றி வட்டமா யூ சேப்ல இருந்ததால, அது பேரு பைவ் ஸ்டோன்ஸ் னு வெச்சிருக்கலாம். அதே போல பக்கத்துல தான் பிலாஸ்சப்பி டிப்பார்ட்மெண்ட் , அதனால அந்த டிப்பார்ட்மெண்ட் பசங்களோட ஃபேரவைட் ஸ்பாட். அதனால கூட இருக்கலாம், இல்லனா இங்க வந்து சில மாணவர்கள் ரோல் பண்ணி செய்ற சில ஆக்டிவிட்டிஸ் ஆர் ஓபன் பண்ணி பண்ற சில ஆக்டிவிட்டிஸ் கூ அப்புறம் ரொம்ப தத்துவம் பேசுவங்க னு கூட இருக்கலாம் னு ல னு அவனுக்கு தெரிஞ்ச கதைய சொன்னான்.
அந்த பைவ் ஸ்டோன் பலருக்கு ஒரு சந்தோஷமான தருணங்கள கொடுத்த இடம். குறிப்பா சில வருஷத்துக்கு முன்னாடி இந்த காலேஜ்ல பர்த்டே செலபிரேஷன்ஸ் க்கு ப்ரவைட் ஸ்பாட் இதான். பின்னாடி இருக்க கேண்டின் ல இருந்து பார்த்த கூட... இன்னும் ஏன் அதுக்கு பக்கத்துல இருக்க புட்பால் க்ரவுண்ட் ல இருந்து பார்த்த கூட அந்த இடம் தெரியாது. ஏன்னா! வர்தா புயலுக்கு முன்னாடி அந்த இடத்த சுற்றி புதர்களும், கொடிகளும் அதிகமா இருந்ததால இந்த இடம் பலருக்கு மறைவா பல ஆக்ட்விட்டிஸ் க்கு பயன்பட்டுச்சி. காலேஜ் படிச்ச புல்லிங்கோ அட்டிஸ் க்கு இதான் ஆல்டைம் ஃபேவரைட் ஸ்பாட் னு கூட சொல்லலாம்.
உங்களுக்கு என்ன மறக்க முடியாத மெமரிஸ்னா அந்த இடத்துல ? னு கேட்டாள் பிரஜா.
என் க்ளாஸ்மேட்ஸ் கூட நான் பார்த்டே செலிப்ரேட் பண்ணது தான் இங்க எனக்கு மெமரீஸ். அதுலயும் என் கூட படிச்ச கன்னியாஸ்தரி ஒருத்தரோட பர்த்டே ரொம்ப ஸ்பேஷல் மெமரி. மத்தப்படி அந்த ப்ளேஸ் பக்கத்துல இருக்க தடியான கொடிகள் ல ஊஞ்சல் விளையாடுவோம் நட்புகள் கூட.
இப்போ எங்க அண்ணா அந்த இடத்தையே காணோம்.என்ன ஆச்சு னு ? கேட்டா ஸ்வேதா.
அந்த காலேஜ் ல ஒரு டிசம்பர் ல... அந்த ஊர தாக்குன வர்தா புயல் கோர தாண்டவம் ஆடி பெரும் சேதத்த கொடுத்துச்சி. அப்படி அந்த புயல் ல இந்த இடத்த சுத்தி இருந்த மரங்கள் வேரோட சாஞ்சிடுச்சி. அப்போ அதை க்ளியர் பண்ணும் போது... இந்த பைவ் ஸ்டோன்ஸ் இருந்த இடம் தெரியாம ஆயிடுச்சி. இப்போ அங்க வெறும் மூணு கல்லு மட்டும் வேற வேற இடத்துல சிதறி கெடக்கு னு சொன்னான் அவன்.
இப்போ அந்த காலேஜ் ல படிக்குற யூஜி பசங்களுக்கு இந்த இடத்த பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல, ஒன்லி பீஜி படிக்குற சிலருக்கு மட்டும் தெரியும். சிலருக்கு சீனியர்ஸ் மூலமா இந்த இடத்த பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. இப்போ அந்த இடத்த கடந்து போறவங்க... அங்க இருக்க மூணு கல்ல வெறும் கல் னு கடந்து போய்டுவாங்க. ஆனா அங்க டைம் ஸ்பேண்ட் பண்ணவங்களுக்கு அது மெமரிஸ்.
இயற்கை எவ்வளவோ அற்புதங்கள் ஆச்சரியங்கள நமக்கு காட்டுனாலும்... அது வரலாற்று பக்கங்கள் ல பல மாற்றங்கள பண்ணிட்டி போய்ட்டே இருக்கும். அப்படி இயற்கையோட ஒரு விளையாட்டுல வர்தா புயலால் அழிந்த போன ஒரு இடம் தான் அந்த பைவ் ஸ்டோன்ஸ்.
- மீண்டும் கட்டர்ஸ் ஸ்டோரிஸ் ல சந்திப்போம்.
மேலே இருக்கும் புகைப்படம் வர்தா புயல் தாக்கிய பிறகு மறுநாள் அந்த இடத்தில் உள்ள விழுந்த மரங்களை க்ளியர் பண்றத்துக்கு முன்னாடி எடுத்த புகைப்படம்.
( பின் குறிப்பு: இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட கற்பனை கதை. )
- தினேஷ் "SDK" குமார்
Super anna😍
ReplyDelete