Gutters Stories #4 - Stone Benches


ஆடியோ வடிவில் இந்த கதையை கேட்க மேலே லிங்க் அ க்ளிக் பண்ணுங்க

ஒரு சனிக்கிழமை.

காலேஜ் ல அன்னைக்கு... ஒரு ஹால் ல ஈவ்னிங் ஈவண்ட் இருந்துச்சி. எப்பவுமே எல்லா ஈவண்ட்டுக்கும் சீக்கிரம் போய்ட்டுற அவனும் அவன் தம்பி கீர்த்தி யும்... அன்னைக்கும் சீக்கிரம் வந்துட்டாங்க ஈவண்ட்டுக்கும். சீக்கிரம் வந்ததால... கேம்பஸ் ல ஒரு வாக் போலாம் னு டிசைட் பண்ணி... அவங்க ரெண்டு பேரும் கிளம்பலாம் னு இருந்த அப்போ கூட... பொன் மகேஷ் ம் வரேன் னு சொன்னதால அவனையும் கூட்டிட்டு போனாங்க அவங்க. அப்போ அவங்க பெல் டவர் பக்கத்துல இருக்க டிவின்ஸ் ஸ்டோன் பெஞ்ச் ல உட்கார்ந்து பேசும் போது... அண்ணா! எனக்கு ஒரு டவுட் னு ஒரு கேள்வி கேட்டான் ! இந்த ஸ்டோன் பெஞ்ச் எப்போ அண்ணா இங்க வெச்சாங்க ? னு கேட்டான் கீர்த்தி. நம்ம காலேஜ் ல இருக்க எல்லாத்துக்கும் இஸ்டரி சொல்ற நீங்க... இந்த ஸ்டோன் பெஞ்ச் க்கு ஏதாவது இஸ்ட்ரி இருந்தா அதப் பத்தி டீட்டயிலா சொல்லுங்க ணு கேட்டான் மகேஷ். 

சரி வாங்க டா... உங்கள இந்த காலேஜ் ல எல்லா ஸ்டோன் பெஞ்ச் க்கும் கூட்டிட்டு போய்... அத பத்தி உங்களுக்கு சொல்றேன் னு கிளம்புனாங்க அவங்க. முதலா அவங்க இருந்த பெல் டவர் பக்கத்துல இருக்க டிவின்ஸ் ஸ்டோன் பெஞ்ச் பத்தி சொன்னான் அவன். இந்த ரெண்டு ஸ்டோன் பெஞ்ச்ஸ் 2013 ல லண்டன் ல இப்போ இருக்க நம்ம காலேஜ்ல படிச்ச ஓல்டு ஸ்டூடண்ஸ் ல சேர்ந்து வாங்கி கொடுத்தது. 

அப்போ அது அண்ணா னு... அதுக்கு பின்னாடி இருக்க புதுசா இன்ஸ்டால் பண்ணா "ப" ஷேப் ஸ்டோன் பெஞ்ச்ஸ் பத்தி கேட்டான் மகேஷ். 
"ப" ஷேப் ஸ்டோன் பெஞ்ச்ஸ்... ரிசண்ட் அ நம்ம காலேஜ் ல 1994 ல காலேஜ் படிச்சி முடிச்ச ஓல்டு ஸ்டூடண்ஸ்... அவங்க இந்த காலேஜ் படிச்சி முடிச்சு 25 வருஷம் ஆனத செலிபிரேட் பண்ண ஒரு ரியூனியன்  ப்ளான் பண்ணி... அந்த நிகழ்ச்சிக்கு ஞாபகமா இத டோனேட் பண்ணாங்க. இங்க இருக்க மாறியே ஸூடாண்ட் சென்டர்க்கு பக்கத்துல சில பெஞ்ச்ஸ்.

அப்போ அது என்ன அண்ணா ?திண்ணை மாறி இருக்கே னு... பெல் டவர் பின்னாடி மெக்ஃபைல்ஸ் போற வழியில இருக்கறத பத்தி கேட்டான் 
கீர்த்தி. 

அந்த திண்ணை மாறி இருக்கறது... கொஞ்ச வருஷக்கு முன்னாடி வரைக்கும்... அங்க இருந்த டென்னிஸ் பீல்டுக்கு தண்ணி தெளிக்க யூஸ் பண்ண தண்ணிர் தொட்டி. ஹால் ஸூடன்ஸ்க்கு எப்படி ஹால் பாண்ட் மாறி... இது நான் ரெசிடண்ட்க்கு. ஆனா ஹால் ஸூடண்ட்ஸ் அளவுக்கு யூஸ் பண்ண மாட்டாங்க இதை. இங்க டக்கிங் ல பண்ணுவாங்களாம் சிலர். அப்புறம் இத சிமெண்ட் போட்டு மூடிடாங்க சில காரணங்களுக்காக. 

அப்புறம் அவங்க நடந்து சயின்ஸ் ப்ளாக் பக்கம் போய்ட்டு இருந்த அப்போ... அங்க கீரீன் வுட்ஸ் அதாவது இப்போ அது கிளினிக் பக்கத்துல இருக்க ஸ்டோன் பெஞ்ச் காட்டி... இது எப்போ அண்ணா கட்டுனாங்க னு கேட்டேன் மகேஷ். 

சில வருஷத்துக்கு முன்னாடி காலேஜ் ல நடந்த கல்ச்சுரல்ஸ் ல வந்த லாபத்துல இது மாறி அஞ்சு டபுள் சைட் ஸ்டோன் பெஞ்ச் காலேஜ் ல இன்ஸ்டால் பண்ணாங்க காலேஜ் ல இருக்க யூனியன் சோசைட்டி . என்னது லாபமா னு கேட்டான் கீர்த்தி. அதுலாம் அப்போ நிறைய வரும்... இப்போ அதை நினைச்சி கூட பார்க்க முடியாது சொசைட்டி அக்கவுண்ட்ஸ்ல னு சொன்னான் அவன். இப்போ மூணு தான் இருக்கு. இங்க ஒண்ணு. மார்டின் ஜங்ஷன் பக்கத்துல. பார்க்கிங் ஏரியால ஒன்னு. பழைய கேன்டின் இருந்த இடத்துல ரெண்டு இருந்துச்சி அத இடிச்சிட்டாங்க.

அப்படியே அவங்க நடந்து போய்... அந்த ஹால் புட்பால் க்ரவுண்ட் ல இருக்க ஒரு பிளாஸ்டிக் பாட்டில் வெச்சி கட்டின... ஸ்டோன் பெஞ்ச் ஒன்ன காட்டினான் அவன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி காலேஜ் ல அமினிட்டிஸ் கன்வினர் அ இருந்த சையது னு ஒருத்தர்... வேஸ்ட் ப்ளாஸ்டிக் பாட்டில் வெச்சி எக்ஸ்பிரமெண்ட் அ காலேஜ் ல ஸ்டோன் பெஞ்ச் கட்ட ப்ளான் பண்ணி... அதுக்கு பாட்டில் கலேக்ட் பண்ண இரும்பு கூண்டுகள் பல இடத்துல காலேஜ்ல வெச்சாங்க. அப்படி அவர் போஸ்டிங் ல இருந்த டைம் ல இந்த ஒரு ஸ்டோன் பெஞ்ச் இங்க ட்ரைல் பில்ட் பண்ணி பார்த்தாங்க. அப்புறம் சில காரணங்களால் அதை கம்ப்ளீட்டா பண்ண முடியாம போய்ட்டீச்சி. இப்போ அந்த இரும்பு கேஜ்ல குப்பை போடுற தொட்டி ஆயிடுச்சி. மெயின் கேட் அப்புறம் லைப்ரரி பக்கத்துல நீங்க இப்போவும் அந்த கூண்டுகள் பார்க்கலாம். 

சரி வாங்கடா உங்களுக்கு காட்டுக்குள்ள இருக்க ஸ்டோன் பெஞ்ச் ஒன்னா காட்டுறேன் னு கூட்டிட்டு போனான் அவன்.
அந்த காலேஜ் இருக்க காட்டுக்கு உள்ள போற என்ட்ரன்ஸ் ல இருக்க... மெயின் கேட் ல இருந்து மெயின் ப்ளாக் போற வழியில... ரைட் சைட் ல இருக்க புதர்களுக்கு உள்ள ஒரு நீளமான ஸ்டோன் பெஞ்ச் ஒன்னு அரச மரத்தடியில் இருக்கு. அது ரொம்ப நாளா யூஸ் பண்ணமா விட்டுட்டாங்க. ஏன்னா அது புதர்களுக்கு உள்ள இருக்கறதால. ஆனா ஒரு காலத்துல லவ்ர்ஸ் க்கு பேவரைட் ஸ்பாட் னு... ஒரு நாற்பது வருஷத்துக்கு முன்னாடி படிச்ச ஓல்டு ஸுடான்ட் சொல்லி கேட்டு இருக்கேன். ஆனா இத எப்போ இங்க கட்டினாங்க னு சரியா தெரியல னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி ஹால் ஈவ்ண்டுக்கு டைம் ஆனதால சீக்கிரம் கிளம்பி போனாங்க அவனும் அவன் தம்பிகளும்.

- மீண்டும் கட்டர்ஸ் ஸ்டோரிஸ் ல சந்திப்போம். 

( பின் குறிப்பு: இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட கற்பனை கதை.  )

தினேஷ் "SDK" குமார்

Comments